சிங்கப்பூரில் இரு ஆண்கள் இணைந்து குடும்பம் நடத்தலாமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

2 women cheated by indian origin cop at singapore case divorces

சிங்கப்பூர் அரசு பாரம்பரிய நெறிமுறைகள் மற்றும் திருமணத்தின் வரையறையைப் பாதுகாக்கும் அதே வேளையில் காலனித்துவ காலச் சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் ஆண்களுக்கு இடையேயான பாலின உறவை குற்றமற்றதாக்குவதாக  அறிவித்துள்ளது.

வருடாந்திர தேசிய தினப் பேரணியில் தனது உரையின் போது, ​​பிரதமர் லீ சியென் லூங், “இப்போது செய்வது சரியானது” என்று தான் நம்புவதாகக் கூறினார். ஏனெனில் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை அனுமதிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த சவாலும் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில், அரசமைப்புச் சட்டத்தை அரசு திருத்தும் என்றார்.

377A பிரிவை நீக்கினாலும்கூட, திருமணம் எனும் பந்தம் பேணிக் காக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

ஆண்களிடையே பாலியல் உறவைக் குற்றமாக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A, பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் 1930களில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதிருந்த பண்புநெறிகளையும் சமுதாயப் போக்குகளையும் அது பிரதிபலித்தது, ஆனால் கடந்த பல ஆண்டுகளில், ஓரினச்சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல சமுதாயங்களில், ஒத்த பாலீர்ப்புடைய ஆண்கள் இப்போது கூடுதலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.

புறக்கணிக்கப்பட்டு, இழிவுபடுத்தப்படுவதற்குப் பதிலாக ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டிருந்த பல நாடுகள் இப்போது அவற்றை நீக்கிவிட்டன.

ஆசிய நாடுகள் பல இச்சட்டத்தை நீக்கிவிட்டாலும் சிங்கப்பூர் இதுவரை அவ்வாறு செய்யல்வில்லை என்று பிரதமர் லீ விளக்கினார்.