“சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்”- பிரதமர் லீ சியன் லூங்!

Prime Minister Lee leave
Prime Minister Lee Hsien Loong on leave until Dec 31 (PHOTO: MCI)

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும், பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஓராண்டு தள்ளிவைக்கப்பட்ட 32- வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23- ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16- வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நேற்று (24/08/2021) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த பாராஒலிம்பிக் போட்டி செப்டம்பர் 5- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வியட்நாமுக்கு புறப்பட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

இதில் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்பட163 நாடுகளச் சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள்.

பாராஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளன. அந்த வகையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுகளுக்கான உச்சமாகக் கருதப்படும் மாற்றுத்திறனாளிகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்ல, சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். விடாமுயற்சியோடு பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமில்லாமல், விளையாட்டாளர்கள், மாற்றுத்திறனாளர்கள் மீதான மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை மீறி தங்களுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளனர்.

‘சிங்கப்பூரில் முதலீடு செய்யும் ‘GlobalFoundries’, ‘Silitronic’ நிறுவனங்கள்’- அமைச்சர் தகவல்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், சிங்கப்பூரைப் பிரதிநிதித்த விளையாட்டாளர்கள், நமக்குப் பெருமை தேடித் தந்தனர், இப்போது, பாராஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வோரும் அவ்வாறு செய்யவிருக்கின்றனர். முடிவுகள் எப்படி இருந்தாலும், விளையாட்டாளர்கள் சிங்கப்பூருக்கு நிச்சயமாகப் பெருமை தேடித் தருவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” என்று ஊக்கப்படுத்தினார்.

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் அணியின் வீரர்கள் ஒரு பதக்கத்தைக் கூடக் கைப்பற்றாத நிலையில், பாராஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூர் அணியின் விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் சிங்கப்பூர் மக்களும், ரசிகர்களும்.