வியட்நாமுக்கு புறப்பட்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter Page

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மூன்று நாள் அரசு முறை பயணமாக, கடந்த ஆகஸ்ட் 22- ஆம் தேதி சிங்கப்பூர் வந்தார். ஏர்ஃபோர்ஸ் 2 விமானத்தில் வந்து ஆகஸ்ட் 22- ஆம் தேதி அன்று காலை 10.50 AM பாய லேபார் விமானப்படைத் தளத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தரையறங்கினார். அவரை சிங்கப்பூர் வெளியுறைவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அமெரிக்க துணை அதிபருடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் அவருடன் சிங்கப்பூர் வந்துள்ளன.

‘சிங்கப்பூரில் முதலீடு செய்யும் ‘GlobalFoundries’, ‘Silitronic’ நிறுவனங்கள்’- அமைச்சர் தகவல்!

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (23/08/2021) காலை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேரில் சந்தித்துப் பேசினார். பின்னர், இஸ்தானாவிற்கு சென்ற அமெரிக்க துணை அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை நேரில் சந்தித்த அவர், இரு நாடுகளிடையேயான உறவுகள், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள், பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்தனர்.

மேலும், சாங்கி கடற்படை விமானத் தளத்திற்கு சென்று பார்வையிட்ட அமெரிக்கா துணை அதிபர், பின்னர் வர்த்தகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிலையில், மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (24/08/2021) இரவு வியட்நாம் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். வியட்நாம் நாட்டிற்கு செல்லும் முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் கமலா ஹாரிஸ்.

ஆகஸ்டில் ஒட்டுமொத்தமாக பெய்ய வேண்டிய மழை… ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது!

அமெரிக்காவின் துணை அதிபராக, கடந்த ஜனவரி மாதம் கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அதற்குப் பின் அமெரிக்காவுக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். குறிப்பாக, அமெரிக்க துணை அதிபரின் முதல் ஆசிய பயணம் இதுவாகும்.

முன்னதாக, கமலா ஹாரிஸ் வந்த விமானம் முதலில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆங்கரெச் நகரில் தரையிறங்கியது. அங்கு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. பிறகு அங்கிருந்து பறந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்தது. இந்த இரண்டு இடங்களிலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இறங்காமல் விமானத்திற்கு உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.