சிங்கப்பூரை நாளைக்கு பாருங்க…நீல மின்னொளியில் ஜொலிக்க போகும் கட்டடங்கள் – இதுதான் விஷயம்மா..?

Pic: PUB

சிங்கப்பூரில் உள்ள முக்கிய கட்டடங்கள் நாளை (மார்ச் 19) முதல் மார்ச் 22 வரை நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளன.

தண்ணீருக்கான நீடித்த நிலைத்தன்மை தொடர்பில் சிங்கப்பூரின் உறுதியான கடப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக
சிங்கப்பூர் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் (PUB) நீலமாய் மாறும் நகரம்  “City Turns Blue” என்ற முயற்சியின்கீழ், 56 முக்கிய கட்டடங்கள் நீல வண்ண விளக்குகளால் ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!

நீலமாய் மாறும் நகரம் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டுகளில் ஆர்ச்சர்ட், கலை அறிவியல் அரும்பொருளகம் போன்ற கட்டடங்கள் இணைந்தன. இந்த ஆண்டு மரினா பே நிதி நிலையம், ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் உள்ளிட்ட 16 புதிய கட்டடங்கள் இணையவிருக்கின்றன.

மேலும், இந்த ஆண்டு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில உயர்கல்வி நிலையங்களும் இத்திட்டத்தில் இணையவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அனைத்துலக தண்ணீர் தினத்தை அனுசரிக்கும் விதமாக இந்த முயற்சியில் மொத்தம் 460 கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன.

சிங்கப்பூரில் 10,713 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி – மேலும் 12 பேர் மரணம்