இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் வரும் நவம்பர் 29 முதல் தனிமைப்படுத்தல் இல்லாத பயணத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

இந்தியாவோடு சேர்த்து இந்தோனேசியாவில் இருந்து வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும்.

சிங்கப்பூர்-தமிழ்நாடு போதுமான விமான சேவை இல்லை: கடும் அவதிக்குள்ளாகும் பயணிகள்

இதன் மூலம் சாங்கி விமான நிலையத்தின் முக்கிய முதல் மூன்று சந்தைகளின் இரண்டின் விமான கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அடுத்த மாதம் டிசம்பர் 6 முதல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

இந்த அறிவிப்பு தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண (VTL) திட்ட விரிவாக்கத்தின் கூடுதல் நடவடிக்கை ஆகும்.

சிங்கப்பூரில் இருந்து தனிமைப்படுத்தப்படாத பயணத்திற்கு இந்தோனேசியா அதன் எல்லைகளை இன்னும் திறக்கவில்லை.

ஆனாலும், சிங்கப்பூரில் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்காக முன்னதாக அதன் எல்லைகளைத் திறந்துவிட்ட இந்தியா, கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் தனிமைப்படுத்தலின்றி பயணம் செய்யலாம்.

இந்த VTL சேவை பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

பூனைக்குட்டியும் எங்களுக்கு உயிர் தான் – விரைந்து சென்று குட்டியை காப்பாற்றிய சிங்கப்பூர் காவல்துறை