ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்டபின் வயிற்றுப்போக்கு ஏற்பட என்ன காரணம்.? – சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆய்வு.!

Pic: SMART

ஆன்டிபயாட்டிக் மருந்து எடுத்துக்கொண்ட பின் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட காரணம் குறித்து கண்டறிய சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர்-MIT ஆய்வு, தொழில்நுட்பக் கூட்டணியைச் (SMART) சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

நுண்ணுயிர்க்கொல்லி எனப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தை உட்கொண்ட பின்னர் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதற்கு அவரது குடலில் உள்ள நுண்ணுயிர்த் தொகுதியே காரணமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மனிதனின் செரிமான மண்டலத்தில் வாழும் பூஞ்சைகள், பாக்டீரியங்கள் போன்ற பல நுண்ணுயிர்களின் தொகுதியே அது. அந்த தொகுதியில் ஃபீக்கலி பாக்டீரியம் பிராட்ஸ்நிட்ஸியை எனும் பாக்டீரியத்தின் அளவு குறைவானால், ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொண்ட பின்னர் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“மற்றவர்களை வாழ வைப்பது நம் ரத்தத்தில் ஊறியது” – சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியில் இயலாதோருக்கு உதவி வரும் தமிழ் சிறுமி!

இதுகுறித்து, கடந்த 2019-ல் சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர்-MIT ஆய்வு, தொழில்நுட்பக் கூட்டணியைச் (SMART) சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து நான்கு வார காலத்திற்கு ஆய்வு மேற்கொண்டனர். நல்ல உடல்நிலை கொண்ட 30 பேர் மூன்று நாட்களுக்கு amoxicillin-clavulanate மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது, அவர்களின் மலம் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு உட்படுத்தப்படடது. எளிய PCR பரிசோதனை முறையைக் கொண்டு, மலத்தில் இருந்த எஃப் பிராட்ஸ் நிட்ஸிமை நுண்ணுயிரியின் அளவு கண்டறியப்பட்டது. பின்னர், பரிசோதனையில் அந்த பாக்டீரியம் குறிப்பிட்ட அளவு குறைவாக இருந்தவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு நார்ச்சத்து அடங்கிய உணவு ஓர் தீர்வாக அமையலாம் என்றும், நார்ச்சத்து உள்ள உணவை சாப்பிடுவது பல பலன்களை வழங்கும் என்றும், குடல்நலத்தை பேண இதுவே சிறந்த பரிந்துரையாக இருக்கும் என ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் Eric J. Alm தெரிவித்துள்ளார்.

விமான டிக்கெட் புக்கிங்கிற்கு இவ்வளவு தள்ளுபடியா..? சலுகைகளை அள்ளி கொடுக்கும் ட்ராவல் போர்டல்கள்; விமான பயணிகள் ரெடியா..!