சிங்கப்பூர் & சுல்தான் இப்ராகிம் ஜோகூர் அறக்கட்டளை இணைந்து ஜோகூருக்கு 100,000 ART சோதனை கருவிகள் உதவி

Singapore Sultan Ibrahim Johor Foundation contribute
(Photo: Sultan Ibrahim Sultan Iskandar/Facebook)

சுல்தான் இப்ராகிம் ஜோகூர் அறக்கட்டளையுடன் சேர்ந்து, சிங்கப்பூர் ஜோகூருக்கு 100,000 கோவிட்-19 ART விரைவு சோதனை கருவிகளை வழங்கியுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ விநியோகம் நேற்று ஆக. 5 ஆம் தேதி நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 புதிய COVID-19 தொற்றுக் குழுமங்கள் – மொத்த எண்ணிக்கை 122…

இந்த சோதனைக் கருவிகளை சிங்கப்பூரின் ஜோகூர் துணைத் தூதர் ஜீவன் சிங், ஜோகூரின் முதல்வர் ஹஸ்னி முகமதுவிடம் வழங்கியதாக சுல்தான் இப்ராகிம் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

கோவிட்-19க்கு எதிரான இந்த போராட்டத்தில் மலேசியாவிற்கு, குறிப்பாக ஜோகூர் மாநிலத்திற்கு உதவ சிங்கப்பூர் எப்போதும் தயார் என்று ஜீவன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பங்களிப்பு, மலேசியாவின் சுகாதார வசதியை மேம்படுத்தும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம், சிங்கப்பூரின் Temasek அறக்கட்டளை ஜோகூரின் சுகாதாரத் துறைக்கு 20,000 ART கருவிகளைப் வழங்கியது என்றும் அந்த முகநூல் பதிவு மேலும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக மேலும் ஒருவர் மரணம்