10 புதிய COVID-19 தொற்றுக் குழுமங்கள் – மொத்த எண்ணிக்கை 122…

Pic: Today

நேற்றைய நிலவரப்படி, 10 புதிய COVID-19 தொற்றுக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையும் சேர்த்து சிங்கப்பூரில் நடப்பில் உள்ள குழுமங்களின் எண்ணிக்கையை 122ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக மேலும் ஒருவர் மரணம்

மேலும் 12 பேருக்கு, ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம் / ஹாங் லிம் மார்க்கெட் மற்றும் உணவு நிலையத்துடன் தொடர்பு உள்ளது, இந்த குழுமத்தில் மொத்தம் 1,127 பேருக்கு தொடர்பு கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளெமெண்டி 448 சந்தை, உணவு நிலையம் மற்றும் ஹைக் சாலை (Haig Road) சந்தை, உணவு நிலையம் ஆகியவை நோய்பரவல் குழுமத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

சமூகத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 881 என இருந்தது, அது கடந்த வாரத்தில் 723 என குறைந்துள்ளது என்று MOH கூறியுள்ளது.

இலவச சர்ஜிக்கல் மற்றும் N95 முகக்கவச விநியோகம் எப்போது?