இலவச சர்ஜிக்கல் மற்றும் N95 முகக்கவச விநியோகம் எப்போது?

(Photo: Temasek Foundation)

முகக்கவச விநியோகத் திட்டம் ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு குடும்பமும் தங்கள் SP பயனீட்டு பில்களைப் பயன்படுத்தி 50 எண்ணிக்கை கொண்ட மருத்துவ தர சர்ஜிக்கல் முகக்கவச பெட்டி மற்றும் 25 எண்ணிக்கை கொண்ட N95 சுவாச முகக்கவச பெட்டியை எதிர்பார்க்கலாம் என்று ஹோ சிங் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வரும் ‘கடல் சிக்கன்’ என்னும் பலூன் மீன்!

CapitaLand மால்கள் மற்றும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுடன் இணைந்து Temasek அறக்கட்டளை இந்த முகக்கவசங்களை விநியோகிக்கும்.

நேரம், செலவு மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க இந்த விநியோத்தின்போது பைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஹோ கூறினார்.

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க, அதற்குப் பதில் தங்கள் சொந்தப் பைகளைக் கொண்டு வருமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

COVID-19 தொற்றுநோய் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு