சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழர் காணவில்லை… காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

Photo: Rajamanickam varatharajan

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், பள்ளி படிப்பை மட்டும் முடித்துள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக சிங்கப்பூருக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். இதில், படித்த இளைஞர்கள் சிங்கப்பூரில் மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் பணியாற்றி வருகின்றன. மற்றவர்கள் கட்டுமான தொழிலிலும், பணிப்பெண்களாவும் பணிபுரிந்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை விதித்தது ஏன்?- சீமான் பதில்!

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வரதராஜன். இவருக்கு வயது 28. இவர் சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கட்டுமான தொழிலாளியாக (Construction Worker) பணிபுரிந்து வருகிறார். சுமார் ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். இவர் 9 SUNGEI KADUT AVENUE என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் 5- ஆம் தேதி அன்று மதியம் 02.00 PM மணிக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு, அடுத்த நாள் (டிசம்பர் 6) இரவு 10.24 PM ஆகியும் ராஜமாணிக்கம் வரதராஜன் விடுதிக்கு திரும்பவில்லை. மேலும், அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.

டிசம்பர் 5- ஆம் தேதி மதியம் 02.00 PM மணி முதல் இரவு 10.00 PM மணி வரை வெளியே செல்வதற்காக சமூக அனுமதிச் சீட்டுகளை (Community Passes) விண்ணப்பித்துள்ளனர். தங்குமிடத்திலிருந்து வெளிநாட்டவர் (Foreigner Worker) வெளியே செல்ல அனுமதிக்கும் பாஸ் வேலிட்டி 8 மணி நேரம் ஆகும்.

சிங்கப்பூரில் புதிதாக 255 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இந்த நிலையில், ராஜமாணிக்கம் வரதராஜன் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், அவரது விடுதியில் தங்கியுள்ள தொழிலாளர் ஒருவர் இது குறித்து மனிதவள அமைச்சகத்தின் ACE அலுவலகத்தின் அதிகாரி கிளார்க்கிடம் (MOM ACE Department Officer Mrclark) தெரிவித்தார். அவர் உடனடியாக, காவல்துறையினரிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, தொழிலாளர் லிம் பூன் கெங் (Lim Boon Keng), உட்லேண்ட்ஸ் டிவிஷன் தலைமை காவல் நிலையத்தில் (Woodlands Division HQ), ராஜமாணிக்கம் வரதராஜன் என்பவர் காணவில்லை என்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரரை வீழ்த்தி சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூ அபாரம்!

இதனிடையே, ராஜமாணிக்கம் வரதராஜனை யாரேனும் கண்டால் உடனடியாக +9173588- 45118 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அளிக்குமாறு, அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.