சிங்கப்பூரில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் படம் பிடித்து சிக்கிய நபர்

Singapore tamil news

Singapore Tamil news: சிங்கப்பூரில் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதியில் படம் பிடித்ததாக ஒருவர் பிடிபட்டுள்ளார்.

பிரானி டெர்மினல் பகுதியில் சட்டப்பூர்வ அனுமதியின்றி ட்ரோன் மூலம் அவர் படம் பிடித்ததாக குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

33 வயதான அவர் மீது இன்று (நவம்பர் 7) குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9ம் தேதி, பிரானி டெர்மினல் அருகே ஆளில்லா ட்ரோன் விமானம் பறப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

வர்த்தக துறைமுகமான பிரானி டெர்மினல் சிங்கப்பூரில் பாதுகாக்கப்பட்ட இடமாக சட்டப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு அனைவராலும் நுழைய முடியாது, அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு $20,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்!