சிங்கப்பூரில் சைக்கிளோட்டி மீது காரை ஏற்றி கொன்ற ஆடவர்; 26 வார சிறைத்தண்டனை விதிப்பு.!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரின் தெம்பனிஸ் (Tampines) பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு மேல் காரை ஒட்டி சென்று, சைக்கிளோட்டி ஒருவரை மோதிய கார் ஓட்டுநருக்கு 26 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி, ஜான்சன் யாப் (49) என்பவர் தெம்பனிஸ் Avenue 3-ல் இருந்து Avenue 4-ஐ நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.

இந்தியா- சிங்கப்பூர் இடையே பேருந்து சேவை தொடங்குவது எப்போது?- வெளியான புதிய தகவல்!

அப்போது, பேருந்து ஒன்றை முந்திக்கொண்டு சென்ற யாப் சில தடங்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி காரை இயக்கினார், பின்னர் போக்குவரத்து சமிக்ஞை பச்சையாக இருந்தபோது சாலையை சைக்கிளில் கடந்த 64 வயது ஆடவர் மீது ஜான்சன் யாப் மோதினார்.

இதையடுத்து, விபத்தில் காயமடைந்த அந்த ஆடவருக்கு யாப் உதவி செய்தார், பின்னர் விபத்துக்குள்ளான ஆடவர் மறுநாள் காலை மருத்துவமனையில் இறந்தார். போதிய கவனத்தோடு வாகனத்தைச் செலுத்தத் தவறியதால் சைக்கிளோட்டி மேல் மோதி அவரைக் கொன்ற குற்றத்தை ஜான்சன் யாப் ஒப்புக்கொண்டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த வாகன ஓட்டுநருக்கு, 26 வாரச் சிறைத்தண்டனை மற்றும் 8 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் COVID-19 விதிகளை மீறிய கோமள விலாஸ் உட்பட 16 கடைகளை மூட உத்தரவு.!