சிங்கப்பூரில் COVID-19 விதிகளை மீறிய கோமள விலாஸ் உட்பட 16 கடைகளை மூட உத்தரவு.!

16 eateries breaching rules
Pics: Urban Redevelopment Authority

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக, கோமள விலாஸ், KFC கிளை உட்பட 16 உணவு மற்றும் பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு வீடுகளை சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்களை அருகருகே உள்ள மேசைகளில் அமர வைத்த காரணத்திற்காக 16 உணவு மற்றும் பானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்காமல் இருந்தது, வாடிக்கையாளர்களுக்காக அதிக சத்தத்தோடு இசையை ஒளிக்கவிட்டது போன்ற காரணத்திற்காக 10 இடங்களுக்கு 1000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு – அமைச்சர் ஈஸ்வரன் பெருமிதம்.!

சிராங்கூன் 76-78 சாலையில் உள்ள கோமள விலாஸ் இரண்டாவது முறையாக கிருமித்தொற்று விதிமுறைகளை மீறியதற்காக பத்து நாட்கள் மூடப்பட்டுள்ளது.

கடைக்குள் வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்கும்போது ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய தவறியதற்காக அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், கடை இந்த மாதம் 8ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஒரு வாரத்தில், 13 இடங்களுக்கும் மற்றும் 14 தனிநபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய வாரங்களில் கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

“கொரோனா காரணமாக டோக்கியோவுக்கு செல்லப்போவதில்லை”- அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு!