சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவு – அமைச்சர் ஈஸ்வரன் பெருமிதம்.!

changi airport flights offers grand draw
Pic: Changi Airport/FB

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் (ஜூலை 01) 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. சாங்கி விமான நிலையத்தை மீண்டும் வளர்ச்சிபெறச் செய்து அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என போக்குவரத்து அமைச்சர் S.ஈஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் 1981-ல் திறக்கப்பட்டு முதல் ஆறு மாதங்களில் சுமார் 4.3 மில்லியன் பயணிகளை கையாண்டதாகத் போக்குவரத்து அமைச்சர் திரு. ஈஸ்வரன் கூறியுள்ளார்.

1986ம் ஆண்டில், 10 மில்லியன் பயணிகள் என்னும் இலக்கையும், 2019-ல் கிட்டத்தட்ட 70 மில்லியன் பயணிகள் என்ற இலக்கையும் சாங்கி விமான நிலையம் எட்டியுள்ளது.

சிங்கப்பூரின் இந்த மாத வானிலை.. இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சாங்கி விமான நிலையம் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஆகச்சிறந்த விமான நிலையத்துக்கான விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தின் நிர்மாணம் என்பது, பொறியியல் ரீதியான பெரிய சாதனை மட்டுமின்றி அது ஒரு தொலைநோக்குச் சிந்தனையுள்ள வெற்றி எனவும் திரு. ஈஸ்வரன் கூறினார்.

சாங்கி விமான நிலையத்தின் வரலாற்றை நினைவுகூர்ந்து உறுதியான சாங்கி உணர்வுடன் மீண்டும் அதை பாதுகாப்பான, நீடித்த உலக விமானப் போக்குவரத்து நடுவமாக உருவாக்க முடியும் என தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் திரு. ஈஸ்வரன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை- 1.18 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!