சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் ஆடிப்பெருக்கு பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் ஆகிய கோயில்களில் வரும் ஆகஸ்ட் 3- ஆம் தேதி ஆடி மாதம் 18- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று ஆடிப்பெருக்கு (Aadi Perukku) பூஜை நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் 40க்கும் மேற்பட்ட அமைப்புகள்.. “ஊழியர்களை லாரியில் ஏற்றக்கூடாது” – பிரதமருக்கு மனு

அதன்படி, ஆடிப்பெருக்கு தினத்தன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் காலை 10.00 மணி முதல் காலை 11.45 மணி வரை விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஆடிப்பெருக்கு பூஜை மற்றும் மஹா தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

ஆடிப்பெருக்கு பூஜை எனப்படும், தாலிப்பெருக்கு (Thaali Perukku) பூஜையில் பங்கேற்க, பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். காலை 10:30 மணி, தாலிப்பெருக்கு பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

$50 கள்ள நோட்டு அடித்து சிக்கிய வெளிநாட்டு ஊழியர் – தங்கும் விடுதி கடையில் பணத்தை மாற்ற முயன்றபோது சிக்கிய கதை

அதேபோல், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில், ஆகஸ்ட் 3- ஆம் தேதி அன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 11.45 மணி வரை பல்வேறு பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறவுள்ளது. பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு காலை 10.00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்படவிருக்கிறது. காலை 08.45 மணி முதல் 09.45 மணி வரை மற்றும் காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை, ஆடிப்பெருக்கு பூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு தினத்தன்று, ஸ்ரீ சிவன் கோயிலில் உள்ள விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், இரவு 08.15 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.