“விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

"விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு"- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!
Photo: Hindu Endowments Board

 

 

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியை (Sri Vinayagar Chathurthi) முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple), ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple), ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (Sri Srinivasa Perumal Temple), ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் (Sri Vairavimada Kaliamman Temple) ஆகிய நான்கு கோயில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சியில் ரூபாய் 15.47 லட்சம் மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்!

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் உள்ள விநாயகருக்கு மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் காலை 10:00 மணி முதல் பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 62234064 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள விநாயகருக்கு மோதக அர்ச்சனை செலுத்த விரும்புவோர், செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று காலை 09.30 மணி மற்றும் மாலை 06.30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரிப்பு – புலம்பும் கட்டுமான நிறுவனங்கள்

ஸ்ரீ சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்பும் பக்தர்கள், செப்டம்பர் 19- ஆம் தேதி காலை 06.30 மணி முதல் காலை 11.30 மணி வரை மற்றும் மாலை 06.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்த முடியும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை மற்றும் மோதக அர்ச்சனை செலுத்த விரும்பும் பக்தர்கள் காலை 07.30 மணி முதல் காலை 11.30 மணி வரை மற்றும் மாலை 06.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை கோயில் அலுவலகத்திலிருந்து சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். செப்டம்பர் 19- ஆம் தேதி அன்று காலை 10.30 மணி முதல் பால் குடம் செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!

கோயிலில் தயாரித்து வைத்திருக்கும் பால் குடங்கள் மட்டுமே பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்த முடியும். மேல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.