சிங்கப்பூரில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்: VTL ஏற்பாடுகளில் வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயண (VTL) ஏற்பாடுகளின்கீழ், சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாகிறது.

Omicron மாறுபாட்டிற்கு எதிரான சோதனை நடவடிக்கைகளை சிங்கப்பூர் கடுமையாக்குவதால், VTL திட்டத்தின்கீழ் வரும் பயணிகள் வருகையை தொடர்ந்து “ஏழு நாட்களுக்கு தினசரி COVID-19 சோதனைகளை” மேற்கொள்ள வேண்டும்.

இந்திய வம்சாவளி ஆடவரின் தூக்கு தண்டனை வழக்கு – சிங்கப்பூர் கூறுவதென்ன?

அதாவது, புறப்படுவதற்கு முந்தைய சோதனை, வருகையின்போது PCR சோதனை, அத்துடன் மேற்பார்வையின்கீழ் ART விரைவு சோதனைகளை 3 மற்றும் 7ஆம் நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்பது தற்போதைய நடைமுறை.

இந்த புதிய சோதனைகள் வரும் டிசம்பர் 6, இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இது, 2022ஆம் ஆண்டு ஜனவரி 2, அன்று இரவு 11.59 மணி வரை, நான்கு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அமைச்சகம் கூறியது.

கூடுதல் சோதனைகள்

2, 4, 5 மற்றும் 6ஆம் நாட்களில் சுயமாக ART சோதனை மேற்கொள்ள வேண்டும். பயணிகள் தங்கள் சோதனை முடிவுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

3 மற்றும் 7 ஆம் நாட்களில், ஒருங்கிணைந்த சோதனை நிலையங்களில் அல்லது விரைவு சோதனை நிலையத்தில் ART சோதனை செய்யப்படும்.

வரும் திங்கட்கிழமை இரவு 11.59 மணி முதல் நிலவழி VTLஐப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்தப் புதிய சோதனை முறை பொருந்தும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிக்கு கொரோனா: ஓமிக்ரான் பாதிப்பா? – தொடரும் பரிசோதனை