சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிக்கு கொரோனா: ஓமிக்ரான் பாதிப்பா? – தொடரும் பரிசோதனை

singapore-to-trichy traveler

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த ஆடவருக்கு புதிய ஓமிக்ரான் வகை பாதிப்பு ஏதும் உள்ளதா என கண்டறிய அவரின் திரவ மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு “ஓமிக்ரான்” கோவிட்-19 தொற்று – முதற்கட்டப் பரிசோதனை

நேற்று வியாழக்கிழமை இரவு வந்த ஸ்கூட் விமானத்தில் அவர் பயணித்து வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான சோதனை முடிவுகள் வந்த பிறகே அதை உறுதி செய்யமுடியும் என திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான ஓமிக்ரான் என்ற மாறுபாடு, தற்போது உலக நாடுகளின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியயுள்ளது.

இது முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது வேகமாக பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு விமான நிலையங்களை வந்தடையும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை