VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

சிங்கப்பூரில் இருந்து தென் கொரியாவுக்கு VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை என்று சிங்கப்பூரில் உள்ள தென் கொரிய தூதரகம் இன்று (டிசம்பர் 2) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் கிருமி மாறுபாடு குறித்த கவலைகள் காரணமாக, தடுப்பூசி போட்டிருந்தாலும், வெள்ளிக்கிழமை முதல் அனைத்து பயணிகளுக்கும் 10 நாள் தனிமைப்படுத்தலை விதிக்கப்போவதாக தென் கொரியா அறிவித்தது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் விமான நிலையத்தில் இனி ஐந்து மணிநேரம் காத்திருப்பு கட்டாயம் !

இந்நிலையில், VTL பயண ஏற்பாடுகள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும், அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் இணையதளத்தில் தெரிவிக்கப்படும் என்று தூதரகம் கூறியுள்ளது.

COVID-19 சூழல் நிலையற்றதாக இருப்பதால், உங்களின் பயணத்திற்கு முன் சமீபத்திய எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள வலைத்தளத்தை தவறாமல் பார்க்குமாறு அனைத்து பயணிகளுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தென் கொரியாவிற்கு VTL இல் பயணம் செய்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் மற்றும் கடந்த 14 நாட்களாக சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும்.

ஆறு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் கொரியாவிற்குள் நுழையலாம் ஆனால் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!