வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவருக்கு “ஓமிக்ரான்” கோவிட்-19 தொற்று – முதற்கட்டப் பரிசோதனை

riot 1988 headman arrested jailed
(Photo: TODAY)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு பயணிகளுக்கு முதற்கட்டப் பரிசோதனையில் ஓமிக்ரான் கோவிட்-19 வகை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) வியாழக்கிழமை (டிச 2) தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு நபர்களும் நேற்று டிசம்பர் 1 அன்று சிங்கப்பூருக்கு வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், மேலும் அவர்கள் சமூகத்தில் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அமைச்சகம் கூறியது.

VTL திட்டத்தின்கீழ் பயணிக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை

சமூக அளவில் இந்த வகை தொற்று பரவியதற்கான எந்த ஆதாரமும் தற்போது வரை இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இரண்டு நபர்களும் தேசிய தொற்று நோய்களுக்கான நிலையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் குணமடைந்து வருகின்றனர்.

அவர்கள் இருவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், மேலும், இருமல் மற்றும் தொண்டை அரிப்பு போன்ற லேசான அறிகுறிகள் அவர்களுக்கு இருப்பதாக MOH கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை SQ479 விமானத்தில் அவர்கள் இருவரும் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்தனர்.

ஒரு நபர் 44 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி, மற்றொருவர் 41 வயதான சிங்கப்பூரர் என்றும் MOH கூறியுள்ளது.

சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் இவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இனி ஐந்து மணிநேரம் காத்திருப்பு கட்டாயம் !