‘மார்ச் 4 முதல் சிங்கப்பூரில் இருந்து பாலிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூரில் குறைந்தக் கட்டணத்தில் சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் (FlyScoot Airlines) நிறுவனம். இந்த விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பிரபல சுற்றுலா தலமான பாலி தீவுக்கு அனைத்து வரியுடன் சேர்த்து ரூபாய் 6,200 கட்டணத்தில் பயணிக்கலாம். வரும் மார்ச் மாதம் 4- ஆம் தேதி முதல் சிங்கப்பூர் மற்றும் பாலி இடையே விமான சேவை தொடங்குகிறது. இவ்வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு விமானங்கள் இயக்கப்படும்.

SGD 1000 பணநோட்டை திருப்பி பார்த்தால் இப்படியொரு ஆச்சர்யம் இருக்கா? இன்னும் சிங்கப்பூர் மக்கள் பலருக்கே இது தெரியாது!

இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்படும். அதைத் தொடர்ந்து, மார்ச் 27- ஆம் தேதி முதல் சிங்கப்பூர் மற்றும் பாலி (Bali) இடையே தினசரி விமானங்கள் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து பாலிக்கு வரும் மார்ச் மாதம் 4, 6, 7, 11, 13, 14, 18, 20, 21, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், பாலியில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மார்ச் மாதம் 4, 6, 7, 11, 13, 14, 18, 20, 21, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நாளை முதல் இவர்களுக்கெல்லாம் வழக்கமான பரிசோதனை இல்லை..!

பாலியில் இருந்து சிங்கப்பூர் விமானக் கட்டணமாக ரூபாய் 3,628.59 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து பாலிக்கு விமானக் கட்டணமாக ரூபாய் 5,834.45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.