சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி….விமான நிலையத்தில் அதிரடி காட்டிய சுங்கத்துறை அதிகாரிகள்!

சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த பயணி....விமான நிலையத்தில் அதிரடி காட்டிய சுங்கத்துறை அதிகாரிகள்!
Photo: Trichy Customs

 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையும், வெளிநாட்டு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ்களை வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், செப்டம்பர் 06- ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பயணி ஒருவர் செயின் வடிவில் 24 கேரட் தரம் கொண்ட 248 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் தலைமை நீதிபதியுடன், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு!

மேலும், தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அந்த நபரை காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதன் காரணமாக, விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.