சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு தங்கத்தைக் கடத்தி வந்த பயணி!

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு தங்கத்தைக் கடத்தி வந்த பயணி!
Photo: Trichy Customs Twitter Page

 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உளநாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தைக் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை வான் நுண்ணறிவுப் பிரிவின் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நவம்பர் 5- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா!

இந்த நிலையில், ஆகஸ்ட் 20- ஆம் தேதி சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பயணி தனது இடுப்பு பகுதியில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பயணியைத் தனியாக அழைத்துச் சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், அதிரடியாக சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீ சிவன் கோயிலில், மஹா ருத்ரம் பூஜை!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் 1,684 கிராம் என்றும், அதன் 24 கேரட் தூய்மையான தங்கத்தின் எடை 1,416 கிராம் என்றும், இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 85.34 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.