சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக ஹைதராபாத்துக்கு ‘Non-VTL’ விமான சேவை- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

Photo: IndiGO Official Twitter Page

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் VTL மற்றும் Non- VTL விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ விமான நிறுவனம். அந்த வகையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக ஹைதராபாத்துக்கும், ஹைதராபாத்தில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கும் ‘Non- VTL’ விமான சேவையைத் தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம். இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும். இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை திருச்சி வழியாக வழங்கப்பட்டு வருவதால், சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப உள்ள பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் அதிபருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, VTL விமான சேவையா, Non- VTL விமான சேவையா எனபதை நன்கு அறிந்து பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல், Non-VTL விமான சேவையில் சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் கட்டாயம் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.