சிங்கப்பூர் to இந்தியா… பொருள் அனுப்பிய ஊழியர்: கார்கோ கட்டணம் S$500 – 15 மாதங்களுக்கு மேலாகியும் பொருள் போய் சேரல.. போலீசில் புகார்

Singapore to india cargo delay police complaint lodge
Credit: Stomp

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தான் வாங்கிய TVயை அனுப்ப S$500 செலவளித்துள்ளார் ஊழியர் ஒருவர். 15 மாதங்களுக்கு மேலாகியும் TV போய் சேர்ந்த பாடில்லை.

அவர் புத்தம் புதிய 55 இன்ச் Samsung 60R QLED தொலைக்காட்சிப் பெட்டியை S$1,149 விலை கொடுத்து முஸ்தபா சென்டரில் வாங்கியுள்ளார்.

அதனை இந்தியாவில் தாம் புதிதாகக் கட்டிய அவரது வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி சோதனையில் சிக்கிய 6 பேர் – குற்றம் உண்மையா… தொடரும் விசாரணை

சரி, TV வாங்கியாச்சு வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்று பார்த்தால், அதை அனுப்புவதற்காக வேண்டி அவர் S$500 கொடுத்துள்ளார்.

அது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது ​​15 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அவரது வீட்டுக்கு டிவி போய் சேரவில்லை. இதுகுறித்து அவர் விசாரித்தபோது, ​​கார்கோ நிறுவனம் சாக்குப்போக்கு கூறி, டெலிவரிக்கான நேரத்தை நீட்டித்துள்ளது.

Singapore to india cargo delay police complaint lodge

கூடுதலாக, டெலிவரி உரிமையாளர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அவர் புகார் கூறினார், இதனால் அவர் அந்த டெலிவரி நிறுவனம் குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

“நான் மட்டுமல்ல. பலர் தாங்கள் அனுப்பிய சரக்குகளுக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். அந்த கார்கோ நிறுவனம் தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ & லாஜிஸ்டிக்ஸ், என்றும், அது லிட்டில் இந்தியாவில் 6 கஃப் ரோட்டில் அமைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஊழியர் மரணம் – சமீபத்தில் மட்டும் 2 ஊழியர்கள் பலி