சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியை மடக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியை மடக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மூடப்பட்டிருந்த காப்பிக் கடையில் திடீர் தீ விபத்து!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ஆண் பயணி ஒருவர் லேப்டாப் பேக் அருகில் மறைத்து எடுத்து வந்த 440 கிராம் எடையுள்ள தங்கத்தகடுகள் மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்து எடுத்து வந்த 185 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு, 37 லட்சத்துக்கு 59 ஆயிரத்து 375 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கத்தைக் கடத்திக் கொண்டு வந்த பயணியைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த வினோத் குமார்?, சிங்கப்பூர் வந்தது எப்படி?- விரிவாகப் பார்ப்போம்!

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால், அங்கிருந்து இருந்து இங்கு தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனால் விமான நிலையம் முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.