சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Photo: Trichy Customs

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, குவைத், கத்தார், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கு விமான நிறுவனங்கள் இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு!

இதனால் திருச்சி விமான நிலையத்தின் அதிகாரிகள், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து பயணிகளிடம் அவ்வப்போது சோதனை சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மார்ச் 2- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி மற்றும் அவரின் உடமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் (Air Intelligence Unit Officers) சோதனை செய்தனர். அப்போது, பயணியின் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 24 கேரட் மற்றும் 279 கிராம் எடைக் கொண்ட, சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்தனர். அத்துடன், தங்கத்தைக் கடத்தி வந்த பயணியையும் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிங்கப்பூரில் இருந்து சீனா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

அதேபோல், மார்ச் 2- ஆம் தேதி அன்று துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் திரும்பிய பயணி ஒருவரை சோதனை செய்த அதிகாரிகள், மலக்குடலில் வைத்துக் கடத்திக் கொண்டு வந்த 120 கிராம் கொண்ட தங்க செயினை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட பயணியையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 6 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.