சிங்கப்பூருக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்!

Photo: Changi Airport

கடந்த 2022- ஆம் ஆண்டு நவம்பர் மாத தரவுகளின்படி, சிங்கப்பூருக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளில் இந்திய சுற்றுலா பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளனர் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (Singapore Tourism Board) அறிவித்துள்ளது.

அடைமழைப் பெய்தாலும் அசராமல் நின்ற மக்கள்! – ஜூரோங் பறவைகள் பூங்காவில் திரண்ட பார்வையாளர்கள்!

அதேபோல், சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தோனேசிய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர். 9,86,900 இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் மலேசியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். சுமார் 4,95,470 சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக, நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளனர். இந்த நாட்டில் இருந்து சுமார் 4,76,480 பேர் சிங்கப்பூருக்கு வந்து சென்றுள்ளனர்.

கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி, சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 5.37 மில்லியனை எட்டியுள்ளது. கடந்த வாரம் சீனா தனது நாட்டு குடிமக்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதாக அறிவித்த நிலையில், 2023- ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வரும் சீன நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை- இந்தியரை கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை!

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்பு சீன நாட்டைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்து செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.