3 நாடுகளுடன் இருவழி பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சிங்கப்பூர்

(Photo: TODAY)

மலேசியா, ஜெர்மனி, தென் கொரியாவுடனான Reciprocal green lane என்னும் பயணமுறையை வரும் பிப்ரவரி 1 முதல் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் பரவும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசு அதன் எல்லை நடவடிக்கைகளை தொடர்ந்து மறுஆய்வு செய்வதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA) இன்று கூறியுள்ளது.

உணவில் உலோகக் கம்பி… அதிகாரிகளிடம் புகார் செய்த ஆடவர்!

உலகளவில் COVID-19 பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி, மலேசியா மற்றும் கொரியா குடியரசுடனான அந்த பயண முறையை பிப்ரவரி 1, திங்கள் முதல் 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக தடை செய்கிறது.

இந்த தடை காலத்தின் முடிவில் சிங்கப்பூர் அரசு Reciprocal green lane பயண ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த பயண முறையின்கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய ஏற்கனவே அனுமதி பெற்றுள்ள பயணிகள் தொடர்ந்து பயணிக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தொடர்பான நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அது SafeTravel இணையதளத்தில் புதுப்பிக்கப்படும்.

சமீபத்திய புதுப்பிப்பு எல்லை நடவடிக்கைகளை பற்றி அறிந்துகொள்ள பயணிகள் அந்த வலைத்தளத்தைப் பார்வையிட MFA-வால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கார்ப்பரேஷன் சாலையில் 2 கார்கள், லாரி, வேன் மோதி விபத்து!