சிங்கப்பூர் வரும் “வெளிநாட்டு பயணிகள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – இன்று முதல் நடைமுறை!

automated-immigration-lanes for foreigners pr
Joshua Lee

வெளிநாட்டு பயணிகள் மேற்பார்வை இல்லாமல் ART ரேபிட் டெஸ்ட் சோதனையை இன்று முதல் (மார்ச் 15) தானாகவே செய்துகொள்ளலாம்.

சிங்கப்பூர் வரும் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இனி இது நடைமுறையில் இருக்கும்.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரவுள்ள மாற்றங்கள் – முழு விவரம்!

யாருக்கு பொருந்தும்?

VTL ஏற்பாடு மூலம் பயணிப்பவர்கள் அல்லது குறைந்த தொற்று விகிதங்கள் உள்ள இடங்களிலிருந்து வருபவர்களுக்கு இது பொருந்தும்.

சிங்கப்பூருக்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் பயணிகள் இந்த சுய ART சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

எங்கே சமர்ப்பிக்க வேண்டும்?

பயணிகள் சிங்கப்பூரில் தங்களுடைய செயல்பாடுகளைத் தொடர்வதற்கு முன்னர், மேற்பார்வை இல்லாமல் எடுக்கப்பட்ட சுயமான ART சோதனை முடிவை sync.gov.sg என்ற இணையம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

குறைந்த தொற்று உள்ள நாடு/பகுதி

மக்காவோ, சீனா மற்றும் தைவான் ஆகியவை “வகை I” இன் கீழ் உள்ள நாடுகள்/பகுதிகள் ஆகும்.

இவை குறைந்த தொற்று எண்ணிக்கையைக் கொண்டவை.

இந்திய பயணிகளுக்கு ?

சிங்கப்பூர் பல நாடுகள்/பகுதிகளுடன் VTL ஏற்பாட்டை கொண்டுள்ளது.

இந்தியாவிற்கும் VTL சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டெரிக்கும் வெயில்…வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? – அதிரடி ஆய்வு.!