சிங்கப்பூரின் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு! – உலகிலேயே மிகப்பெரிய துறைமுகமாக மாறப்போகும் துவாஸ் முனையம்

Cargo ship fire incident
Pic: AFP
சிங்கப்பூரின் பல்வேறு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.தற்போது,சிங்கப்பூரின் ஐந்து பெரிய கடல்துறை நிறுவனங்களுக்கு ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் தேவை என்று அறிவித்துள்ளன.பிஎஸ்ஏ கார்ப்பரேசன்,ஜூரோங் போர்ட்,ஏ.பி மோல்லர்-மியர்ஷ்க்,பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ்,ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விளக்கமளித்தன.

தஞ்சோங் பகார் துறைமுகத்திற்கு கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.இதை நினைவுகூரும் வகையில் நடமாடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் 5 நிறுவனங்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.
இதற்கிடையில்,கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்,1966-இல் தஞ்சோங் பகார் துறைமுகத்தைக் கட்ட எடுக்கப்பட்ட முடிவையும்,தற்போது துவாஸ் துறைமுகத்தைக் கட்ட எடுக்கப்பட்டுள்ள முடிவையும் ஒப்பிட்டார்.துவாஸ் துறைமுகம் படிப்படியாகத் திறக்கப்படும்.2040-ஆம் ஆண்டில் பணி முழுமையடையும்.அப்போது உலகின் மிகப்பெரிய தானியங்கி துறைமுகமாக துவாஸ் துறைமுகம் திகழும் என்று கூறினார்.மாற்றங்களைத் தழுவிக் கொண்டு எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்றத் துணிவுடன் திகழ வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரில் பசுமை நிதியளிப்பு,கரிமக் கழிவுக் கணக்கீடு போன்ற புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.மேலும் மென்பொருள் பொறியியல்,சேவை வழங்கீட்டு நிர்வாகம்,கணினித் தகவல் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் தேவை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.