தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பிப். 1 முதல் இதில் கலந்துகொள்ள அனுமதி

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பிப்ரவரி 1 முதல் தனிப்பட்ட வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.

கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மத நடவடிக்கைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் அது வெளியாகியுள்ளது.

“செம்ம ஹேப்பி” – சிங்கப்பூரில் 2023 முதல் இந்த ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்!!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையைப் கணக்கில் கொள்ளாமல், ஒரு வழிபாட்டுத் தலத்தில் 5 பேர் கொண்ட குழு எந்த நேரத்திலும் தனிப்பட்ட வழிபாட்டை நடத்த அனுமதிக்கப்படும்.

இந்த தனிப்பட்ட வழிபாட்டாளர்கள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அந்த குழுவிற்கும் மதம் சம்மந்தப்பட்ட பணியாளருக்கும் இடையே குறைந்தபட்சம் 1 மீ பாதுகாப்பு இடைவெளி இருக்க வேண்டும்.

குறிப்பாக, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பணியாளருடன் மட்டுமே குழு தொடர்பு கொள்ள வேண்டும்.

சிங்கப்பூருக்கு 2021இல் 330,000 சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை – 2ம் இடத்தில் இந்திய பயணிகள்