மறுபடியும் தலைதூக்கும் தொற்று! – தயாராகும் சிங்கப்பூர் தொற்றுநோய் போராட்ட அமைப்பு

Singapore tight covid measures
Pic: File/Reuters

ஈராண்டுகளாக உலக நாடுகளை உலுக்கி வந்த கோவிட்-19 வைரஸ் தொற்றை சிங்கப்பூர் அரசு சமாளித்து வருகிறது.தற்போது தொற்று நோய்க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்ட அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் தொற்றை அடுத்து ஏதேனும் கிருமிப் பரவல் எதிர்காலத்தில் வந்தால்,அதனைத் திறம்பட எதிர்கொள்ளும் பட்சத்தில் அந்த அமைப்பு தயாராகி வருகிறது.பொதுச் சுகாதார,மருந்தக மற்றும் ஆய்வு வளங்கள் போன்றவற்றை தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையம் அதிகரித்து வருவதாக அதன் தலைவர் லியோ யீ சின் கூறினார்.

தொற்று பரவக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பேரில் இந்த ஆயத்தப் பணிகள் நடைபெறுவதாக அவர் கூறினார்.உலகின் பல்வேறு நாடுகளுடன் சிங்கப்பூர் தொடர்பு கொண்டிருப்பதால்,இதர நாடுகளில் என்ன நிகழ்ந்தாலும் அதனால் நம் தீவு மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

800 பேர் பணிபுரியும் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் படிப்படியாக மனிதவளம் அதிகரிக்கப்படுகிறது.மேலும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் அது வேலைக்குத் தேடி வருகிறது.நோய்களை கண்டறிதல்,தடுப்பூசி திறன்கள் ஆகியவற்றை பலப்படுத்துகிறது.

தொற்று பரவும் பட்சத்தில் அரசாங்கத்துடன் இணைந்து இணக்கமாகச் செயல்படக்கூடிய அமைப்பாக இந்த நிலையம் திகழும்.அதாவது புதிதாக ஏற்படும் தொற்றினை முதலில் இந்த நிலையம் ஆராய்ந்து பின்னர்,அது குறித்த விரிவான விளக்கத்தை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும்.