VTL பயணம்: நடைமுறை நுழைவுத் தேவைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தல்

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

சிங்கப்பூரில் இருந்து இந்த VTL நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள், அந்ததந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள நுழைவுத் தேவைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதிதாக அறிவிக்கப்பட்ட VTL நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, கத்தார், சவூதி அரேபியா மற்றும் UAE ஆகியவை சுகாதார அமைச்சகத்தின் நாடு/பிராந்திய வகைப்பாட்டின்கீழ் “வகை II”-இல் இருப்பதாக CAAS கூறியது.

சிங்கப்பூர் to இந்தியா விமானங்களுக்கு அதிகரிக்கும் தேவை – டிராவல் ஏஜென்சிகளில் அலைமோதும் கூட்டம்

சிங்கப்பூர் மற்றும் பிற VTL நாடுகளை விட அந்த நாடுகள் ஒரே மாதிரியான அல்லது குறைவான கோவிட்-19 நிகழ்வு விகிதங்களைக் கொண்டுள்ளன.

VTL திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகள் வருகையின்போது தனிமை உத்தரவை (SHN) நிறைவேற்ற வேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட “நெகடிவ்” சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் வருகையின்போது PCR சோதனை எடுக்கப்படும்.

இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு விமானங்கள்…

இன்றுவரை, ஆஸ்திரேலியா, புருனே, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கொரியா குடியரசு, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, UK மற்றும் அமெரிக்கா ஆகியவையுடன் சிங்கப்பூர் VTL திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வரும் நவம்பர் 29, முதல் மலேசியா, பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் சிங்கப்பூர் VTL திட்டத்தை அறிமுகப்படுத்தும்.

இந்தியாவுக்கு அனுமதி: விமானங்களுக்கு திடீர் அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஏஜென்சிகள் – இந்திய ஊழியரின் எதிர்பார்ப்பு