சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளுக்கு தினசரி சோதனை, தனிமை இல்லை – அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட நாடு

Changi Airport Facebook

சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகள் தினசரி கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை.

அதாவது வருகைக்கு பிந்திய ஆறு நாட்களுக்கு தினசரி கோவிட்-19 பரிசோதனைகளை பயணிகள் மேற்கொள்ள வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா பயணம்… திருச்சி, கோவையில் இருந்து குறைந்த கட்டண சலுகை

இந்த அறிவிப்பு VTL விமானம் மற்றும் VTL தரைவழி ஏற்பாடுகளுக்கு பொருந்தும் என்று மலேசிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக , LITB எனப்படும் லங்காவி சர்வதேச பயண ஏற்பாடு மற்றும் குறுகிய கால வணிகர்களுக்கான One Stop Centre (OSC) பயணிகளுக்கும் பொருந்தும்.

இருப்பினும், மலேசியாவிற்கு வந்த இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது நாட்களில் கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதிய நடைமுறையின் கீழ் தொடர்ந்து 6 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 29 அன்று இரு நாடுகளும், சாங்கி விமான நிலையத்திற்கும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே VTL விமான சேவையை தொடங்க ஒப்புக்கொண்டன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து