அனைத்து பயணிகளுக்கும் எல்லைகளை திறக்க தயாராகும் சிங்கப்பூர்; இருந்தாலும் VTL வருகை குறைவு.!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் எல்லைகளைத் திறந்து விட சிங்கப்பூர் தயாராகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர் வரும் அனைத்துலகப் பயணிகளின் வருகை ஏறுமுகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.

VTL எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதை ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூருக்கு வருவோரில் சுற்றுப் பயணிகள் மிகவும் குறைவாக உள்ளனர். நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக வருவோரே அவர்களில் அதிகம் என்றும், இப்படி வருவோர், சுற்றுலாத் துறையில் செலவிடும் தொகை மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதை கவனிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

VTL விமானப் பயணத் திட்டத்தின்கீழ் குறுகியகால பயணிகளுக்காக 210,000க்கும் மேற்பட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்றும், சிங்கப்பூருக்கு குறுகிய கால வருகை மேற்கொள்ள அதிகமானோர் விரும்புகிறார்கள் என்பதை இது காட்டுவதாகவும் சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறியுள்ளார்.

COVID-19 தொற்று பரவலுக்கு முன்பு வந்த பயணிகளின் அளவில் குறைந்தபட்சம் பாதி அளவை இந்த ஆண்டில் எட்டிவிடவேண்டும் என்பதே தங்களது இலக்கு என போக்குவரத்து அமைச்கம் தெரிவித்துள்ளது.

அதிகமானோர் சிங்கப்பூர் வர VTL ஏற்பாடு அனுமதிக்கிறது என்றும், இருப்பினும் உள்நாட்டு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த் வேண்டிய தேவை இருக்கிறது என்று தான் கருதுவதாகவும் சிங்கப்பூர் தேசிய பயண முகவர்கள் சங்கத்தில் தலைவர் ஸ்டீவன் லெர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் திடீரென சுருண்டு விழுந்து மரணம்