சிங்கப்பூரில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம்!

Pic: Roslan RAHMAN/AFP

டிசம்பர் முதல் பாதியில் அதிக காற்று வீசும் என்றும், பெரும்பாலான நாட்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

டெலிகிராமை இதற்குமா பயன்படுத்துகிறார்கள்… 50 பேர் அதிரடி கைது!

அதே போல, ஓரிரு மழை நாட்களில், வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று அது கூறியுள்ளது.

மேக மூட்டம் குறைவாக இருக்கும் அல்லது இல்லாத சில வெப்பமான நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸைத் தொடலாம்.

“பெரும்பாலான நாட்களில் மதியம் தீவின் சில பகுதிகளில் குறுகிய கால மிதமான முதல் பலத்த இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்,” என்று வானிலை ஆய்வகம் கூறியது, இது சில நேரங்களில் மாலை வரை நீடிக்கலாம்.

இந்த டிசம்பரின் முதல் இரண்டு வாரங்களுக்கு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Omicron வைரஸ் தொற்று குறித்த முழு விவரங்கள் தெரியாததால் கட்டுப்பாடுகள் தேவை இல்லை – சிங்கப்பூர்