ஜில்..ஜில்..கூல்..கூல்… சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை தொடரும்..!

Singapore Met forecasted rainy
(PHOTO: Zheng Zhangxin)

Singapore Weather: சிங்கப்பூரில் இந்த மாதம் பிப்ரவரி 2022ன் இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பிற்பகல் நேரத்தில் குறுகிய நேரம் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அம்மழையானது சில சமயங்களில் மாலை வரை நீடிக்கலாம்.

நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?

அதில் சில நாட்களில், சிங்கப்பூர் முழுவதும் பரவலான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்படுகிறது.

ஏனெனில், தற்போதுள்ள வடகிழக்கு காற்று வலுவடைந்து சிங்கப்பூர் மையத்தில் ஒன்று சேரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த பிப்ரவரி மாதத்துக்கான மழையின் அளவானது, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“கூடுதலாக, பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இடைப்பட்டு இருக்கும்.”

“சில நாட்களில் அந்த வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸை எட்டும்” என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.

நான்கு நாடு/பகுதிகளுக்கான VTL சேவையை தொடங்க உள்ளது சிங்கப்பூர் – பிப். 22 முதல் VTP அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!