சிங்கப்பூர் வானிலை – மழை பெய்யும் அதேசமயம் சூடாக இருக்கும்… வானிலை மையத்தின் முன்னறிவிப்பு!

singapore-weather-rest-of-september-2022
TODAY

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக வானிலை மாறிவரும் நிலையில் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இம்மாதாத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கு சூரியக் கதிர்வீச்சினால் சற்று வெப்பமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது இருந்த குளிர்ச்சியான சூழலும் இடைவிடமால் பெய்த மழையும் தற்போது, மெதுவாக குறையத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான நாள்களில் வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகலாம். அத்துடன் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ்வரை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிங்கப்பூரில் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில பகுதிகளில் நாள்களில் மதிய வேளையில் இடியுடன் கூடிய மழையையும் எதிர்பார்க்கலாம். அந்த மழையானது மாலை வேளை வரை நீடிக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே, பிப்ரவரி மாதத்தின் முதல் இரு வாரத்தில் சிங்கப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு சராசரியைவிட அதிகமாகவே இருக்கும் என்றும் அதேவேளை சற்று வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் மையம் குறிப்பிட்டுள்ளது.