‘VTL’ சிறப்பு பயணத் திட்டம் மேலும் ஆறு நாடுகளுக்கு விரிவாக்கம்!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தை (Vaccinated Travel Lane- ‘VTL’) மேலும் ஆறு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority of Singapore- ‘CAAS’) அறிவித்துள்ளது.

“மலேசியா, சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க வேண்டும்”- இந்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதல்வர் கடிதம்!

இது தொடர்பான சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பில், “கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டம் (VTL) , தாய்லாந்து, ஃபிஜி, துருக்கி, கம்போடியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய ஆறு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

சிங்கப்பூர், தாய்லாந்து இடையேயான விமான சேவை வரும் டிசம்பர் மாதம் 14- ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், ‘VTL’ திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கட்டாயம் ‘Vaccinated Travel Pass’- க்கு விண்ணப்பித்து, அதனை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். ‘Vaccinated Travel Pass’- க்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் மாதம் 7- ஆம் தேதி அன்று காலை 10.00 AM தொடங்குகிறது.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

அதேபோல், ஃபிஜி, இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு, கம்போடியா ஆகிய நாடுகளுடனான விமான சேவை வரும் டிசம்பர் மாதம் 16- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதற்கான ‘Vaccinated Travel Pass’- க்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் மாதம் 9- ஆம் தேதி அன்று காலை 10.00 AM தொடங்குகிறது.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் குடியுரிமை வைத்திருப்பவர்கள் (Singapore citizens) மற்றும் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் (Permanent Residents) மற்றும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் ‘Vaccinated Travel Pass’- க்கு விண்ணப்பிக்க தேவையில்லை.

130- வது ஆண்டை நிறைவு செய்த ஷெல் நிறுவனத்துக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து!

எனினும், குறுகிய கால பார்வையாளர்கள் (Short-Term Visitors) தனித்தனியாக விசாவைப் பெற வேண்டும். அதைத் தொடர்ந்து, ‘Vaccinated Travel Pass’- க்கு விண்ணப்பித்து அனுமதியை பெற வேண்டும். பின்னர், சிங்கப்பூருக்கு பயணிக்க வேண்டும்.

‘VTL’ சிறப்பு பயணத் திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://safetravel.ica.gov.sg/vtl/conditions என்ற இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள் தொடர்பாக எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூர் அரசின் ‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் தற்போது வரை மொத்தம் 27 நாடுகளுக்கு விமான சேவைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.