கடனில் தவித்த தந்தையின் தொழில்… சிங்கப்பூரில் தன் வேலையை தூக்கி எறிந்து தந்தையின் பாரம்பரிய தொழிலை தூக்கி நிறுத்திய பெண் ஊழியர்

singapore-woman-quit-job-father-car-workshop
@pitstop.tyres TikTok

Singapore Jobs: சிங்கப்பூரில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு தன்னுடைய தந்தையின் மெக்கானிக் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார் பெண் ஒருவர்.

தன்னுடைய தந்தையின் பாரம்பரிய தொழில் சுமார் S$40,000 கடனில் சிக்கி தவித்த நிலையில், 27 வயதுமிக்க அந்த சிங்கப்பூர் பெண் தன்னுடைய முழு நேர வேலையை விட்டுவிட்டு துணிச்சலாக வெளியேறியுள்ளார்.

கோர்டெல்லியா ஆன் டான் மெய் யின் (27) என்ற அந்த பெண், தன் தந்தையின் வணிகம் 2021 ஆம் ஆண்டில் பல நிதி சவால்களை எதிர்கொண்டதை அறிந்து அந்த முடிவினை எடுத்தார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம்? – உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் MOM

அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கார் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் தொழில்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது.

அதனால் தந்தையின் நிறுவனம் கடனால் சிக்கி தவித்தது, தன் குடும்பத்திற்காக அரும்பாடுபட்ட தன் தந்தையின் தொழிலை மீட்டெடுக்க அந்த பெண் களத்தில் இறங்கியது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்பாக venture capital நிறுவனத்தில் முழுநேர வேலை செய்துவந்த பெண், நிலையான வருமானத்தைப் பெற்றுவந்துள்ளார். அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2020 ஆம் ஆண்டில் படித்து பட்டம் பெற்றவர்.

டான், கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் தனது தந்தையிடமிருந்து நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டார், மேலும் நிறுவனத்தின் கடன்களில் இதுவரை கிட்டத்தட்ட பாதியை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்தி சாதித்துள்ளார்.

டான், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு சம்பளம் வேண்டாம் என்று வேலை செய்துள்ளார். அதற்குப் பதிலாக தேவைப்படும் போதெல்லாம் S$200 வரை மட்டும் மாதாந்திர தொகையாக எடுத்துள்ளார்.

தன் தந்தையின் பாரம்பரிய தொழில் அழிந்துவிட கூடாது என்று தன்னுடைய வேலையை தூக்கி எறிந்து சாதித்து காட்டியுள்ளார் இந்த பெண் ஊழியர்.