மாலில் ஒருவர் தலையில் சூப்பை ஊற்றி, கையை கடித்ததாக பெண் ஒருவர் கைது..!

Singapore women arrested in mall
Woman apprehended by police at Novena Square. (Photo Credit : Ravi MRavi/Facebook)

சிங்கப்பூரில் ஒருவரின் தலையில் சூப் ஊற்றி மற்றும் கையை கடித்ததாக நோவனா ஸ்குயரில் (Novena Square) காவல் துறையால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் மால் ஒன்றில் ஒரு பெண்ணை நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையும் படிங்க : ரயில் சேவை மீண்டும் தொடங்கின – தொந்தரவுகளுக்கும் போக்குவரத்து அமைச்சர் வருத்தம்..!

இந்து காணொளியானது அக்டோபர் 14 அன்று சிங்கப்பூர் அரசியல்வாதியான M Ravi உட்பட பல முகநூல் பக்கங்கள் மற்றும் குழுக்களில் இந்த காணொளி பகிரப்பட்டது.

OUTRAGEOUS AND ABUSE OF POWER.AWARE SHOULD SPEAK UPThis lady is subjected to arrest by 3 male police officers and one female police officer based on this video that was forwarded to me by a lawyer a few minutes ago to help her. She is essentially asking where is her human rights. To handcuff someone unlawfully in public is a serious offence if such arrest is declared by the court as unlawful. It also attracts criminal penalty of false imprisonment and battery. From what i see, this arrest is totally unacceptable. Hope this matter is raised in Parliament. My colleagues from other countries including including our neighbours are shocked at the manner in which these police officers effected the arrest which is very handed when they literally armtwisted her. And why even arrest this poor lady for Godsake!!

Posted by Ravi MRavi on Tuesday, 13 October 2020

இந்த சம்பவம் குறித்து MotherShiP கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த காவல்துறை, மனநல சுகாதார சட்டத்தின் கீழ் அக்டோபர் 13ஆம் தேதி அன்று அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும், ஒரு உணவகத்திற்குள் ஒருவர் மீது சூப்பை தலையில் ஊற்றி மற்றும் கையை கடித்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னர், அந்த நபர் Tan Tock Seng மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையின் போது, ​​அந்தப் பெண் தொடர்ந்து சத்தமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த அந்த பெண்ணின் உறவினராலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கும் பொதுமக்களுக்கும் ஆபத்து இருப்பதாக காவல்துறை எண்ணியதால், அவர் மனநலச் சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்தப் பெண் தற்போது மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கொரோனா உயிரிழப்புக்கு நிகராக டெங்கு உயிரிழப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…