சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியை விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!

சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியை விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!
Photo: Trichy Customs

 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்டல வான் நுண்ணறிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அவ்வப்போது பயணிகளையும், உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஸ்ரீ சிவன் கோயிலில், மஹா ருத்ரம் பூஜை!

அந்த வகையில், சிங்கப்பூரில் இருந்து வரும் பெண் பயணி தங்கம் கடத்தி வருவதாக, வான் நுண்ணறிவுச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று (ஆகஸ்ட் 20) அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளையும், உடைமைகளையும் தீவிர சோதனைக்குட்படுத்தினர்.

அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணியின் உடைமைகளைச் சோதனை செய்ததில், தங்கச் சங்கிலிகள் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அந்த பெண் பயணியைத் தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் கடத்திக் கொண்டு வந்த 800 கிராம் கொண்ட தங்கச் சங்கிலிகளைப் பறிமுதல் செய்து, அந்த பயணியை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நவம்பர் 5- ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 47.36 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.