சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூரில், முதலாளி வீட்டில் தங்காமல் வெளியே வசிப்பதற்கு சில பணிப்பெண்களுக்கு S$1,500 வரை ஊதியம் வழங்கப்படுவதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதவள அமைச்சத்தின் முறையான அனுமதி இல்லாமல் அவர்களை அவ்வாறு வெளியே தங்க வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை

இருப்பினும், இவ்வாறான வெளி ஏற்பாட்டைச் செய்யும் முதலாளிகளை சில பணிப்பெண்கள் நாடிச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான முதலாளிகளைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களின் வழியே ஐம்பது பணிப்பெண்கள் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்கள் முதலாளி வீட்டில் தங்காமல் வெளியே தங்குவது அவர்களுக்கு சுதந்திரமாக உள்ளது. என் முதலாளிகளும் இந்த ஏற்பாட்டை விரும்புவதாக பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி என்ற பணிப்பெண் உள்ளூர் நாளிதழுக்கு பேட்டியின் வாயிலாக கூறியிருந்தார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு (work permit) விதிமுறைகளின்கீழ், work permit உள்ளவர்கள் குறிப்பிட்ட முகவரியில் தங்கி, அங்கு மட்டுமே வேலை செய்ய முடியும்.

அப்படி இல்லை என்னும் பட்சத்தில் முறையான கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வ அனுமதியைப்பெற வேண்டும்.

அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பாதசாரி (வீடியோ): ஆபத்தான முறையில் காரை இயக்கிய ஓட்டுனரின் உரிமம் உடனடி ரத்து