இனி ஒரு வெளிநாட்டு ஊழியர் உயிர் கூட போகக்கூடாது – சிங்கப்பூரில் அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு!

construction worker death
CNA reader

சிங்­கப்­பூ­ரில் வேலை­யி­டத்­தில் நிக­ழக்­கூ­டிய உயிர் சேதம் தொடர்ந்து அதி­க­மாகி இருக்­கிறது. இந்த நிலை­யில், மனி­த­வள அமைச்சகம் தனது அம­லாக்க முயற்சி­களை முடுக்­கி­விட்டு இருக்­கிறது.

ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இரண்டு நிறு­வ­னங்­க­ளின் வேலை­இடங்­களில் வேலை நடைமுறைகள் பாது­காப்பு அற்­ற­வை­யாக இருந்­த­தால் அந்த நிறு­வ­னங்­களுக்கு அபரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இரண்டு நிறு­வ­னங்­களும் மீண்டும் வேலை­யைத் தொடங்க வேண்­டு­மா­னால் அவை பாதுகாப்­பற்ற வேலை நடைமுறைகளைச் சரிப்­படுத்­த வேண்டும்.

வேலை­யிட பாது­காப்­பை­ உறுதி செய்ய வேண்டும் போன்ற பல நிபந்­தனை­களை நிறை­வேற்ற வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை­யி­டங்­களில் காணப்­பட்ட பாது­காப்­பற்ற நடை­மு­றை­க­ளைக் காட்­டும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது.

அந்த நிறு­வ­னங்­களின் இரண்டு வேலை­யி­டங்­க­ளி­லும் காணப்­பட்ட நடைமுறைகள் ஏற்­றுக்­கொள்ள முடி­ யா­த­வை­யாக இருந்­ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்­டு­மா­னப் பணி­கள் சூடு­பிடிக்­கின்­றன. இந்­தச் சூழ்­நி­லை­யில், ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் முயற்­சி­களை முடுக்­கி­விட வேண்டும். ஊழி­யர்­களுக்கு வேலை­ இ­டங்­கள் பாது­காப்­பா­ன­வை­யாக இருப்பதை அவர்­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்­கப்­பூ­ரில் இந்த ஆண்­டில் ஜூலை 20ஆம் தேதி வரை வேலை­யி­டங்களில் 31 மர­ணங்­கள் நிகழ்ந்து இருக்­கின்­றன.

பாது­காப்பு இல்­லாத வேலை நடை­மு­றை­களைப் பற்றி தெரிந்­தால் அது பற்றி பொது­மக்­கள் mom.gov.sg/report-wsh-issues என்ற முக­வ­ரி­யில் தெரி­யப்­ப­டுத்­த­லாம். அல்­லது 6438-5122 என்ற தொலை­பேசி எண்­ணில் தொடர்­பு­கொள்­ள­லாம்.