ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் வரை அதிகரிப்பு – சம்பள உயர்வை எதிர்பார்த்து அதிகமான ஊழியர்கள்!

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் ஏஜென்சி நிறுவனங்கள் கூறுகையில், ஊழியர்களின் சம்பளம் 15 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளன.

அந்த சம்பள உயர்வு யாருக்கு அதிகமாக காணப்படுகிறது என்று பார்த்தால் அடிக்கடி வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறும் ஊழியர்களிடம் காணப்படுவதாக ஏஜென்சிகள் கூறியுள்ளன.

“காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த பெருமை!

ஆனால், ஊழியர்களை தக்க வைக்கவும், அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் இது தீர்வு அல்ல என்பதையும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தொழிநுட்ப ரீதியாக வேலை பார்க்கும் முக்கால்வாசி ஊழியர்களுக்கு மாற்று வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆய்வு தெரிவிப்பதாக செய்தி கூறியுள்ளது.

அதிகமான ஊழியர்கள், இந்த ஆண்டு சம்பள உயர்வை எதிர்பார்த்து இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பள உயர்வை எனினும் பல நிறுவனங்கள் குறுகியகால தீர்வாக காண்பதாகவும் மனிதவள நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த விமானம்.. சுமார் 4.2 கிலோ தங்கம் – சிக்கிய இருவர்