கடுமையான நெருக்கடி, செலவினங்கள் அதிகரிப்பு – “சம்பள உயர்வு வேண்டும்” கோரிக்கை வைக்கும் ஊழியர்கள்!

singapore Foreigners mom salary
AFP

சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் தங்களுக்கான சம்பள உயர்வு வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், சம்பள உயர்வை பெறுவதற்காக தங்கள் முதலாளிகளை வலியுறுத்தவும் ஊழியர்கள் தயாராக உள்ளனர்.

சிங்கப்பூர் சாலையில் பயங்கர சண்டையில் ஈடுபட்ட ஆடவர்கள் – யார் அவர்கள்..?

சிங்கப்பூரில் உள்ள 10 ஊழியர்களில் ஆறு பேர் சம்பள உயர்வு கோரத் தயாராக இருப்பதாக மனித வள சேவை நிறுவனமான ADP இன்று (மே 5) அன்று அதன் “பீப்பிள் அட் ஒர்க்” அறிக்கையில் கூறியது.

இது 25 முதல் 34 வயதுக்குட்பட்ட ஊழியர்களில் 10 பேரில் ஏழு பேரிடம் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் சிங்கப்பூரில் உள்ள சுமார் 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் ADP ஆய்வு செய்தது.

உலகளவில் 17 நாடுகளில் உள்ள 33,000 பேரிடம் நடத்திய ஆய்வின் ஒரு பகுதியாக இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பணியின் மீது வைத்திருக்கும் மனப்பான்மையையும், மேலும் எதிர்காலத்தில் அவர்களின் பணியிடத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த ஆய்வு ஆராய்ந்தது.

சிங்கப்பூரில் உள்ள 10 ஊழியர்களில் 5 பேர் அடுத்த 12 மாதங்களில் ஊதிய உயர்வைப் எதிர்பார்ப்பதாகவும், 10ல் நான்கு பேர் போனஸ் தொகையை எதிர்பார்ப்பதாகவும் ADP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை இரண்டு வாரங்களுக்கு மேலாக காணவில்லை!