சிங்கப்பூரில் ஐந்தில் இரு ஊழியர்களுக்கு வேலையிட பாலியல் தொல்லை – ஆய்வு

Singapore workers s

சிங்கப்பூரில் ஐந்து ஊழியர்களில் இருவர் வேலையிட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, முதல் தேசிய பிரதிநித்துவ கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், அலுவலகத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத பாலியல் தொல்லைகள் அல்லது கருத்துக்களால் பாதிக்கப்பட்டதாக அந்த ஆய்வில் கலந்துகொண்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்று பாதித்த வெளிநாட்டு ஊழியர்… மற்ற விடுதி ஊழியர்களுடன் தொடர்பு

இதில் மூன்று பேரில் ஒருவர் தங்கள் முதலாளி அல்லது அலுவலகத்தில் அவர்களை விட மூத்தவரால் அந்த துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேரில் ஒருவர் மட்டுமே தங்கள் முதலாளி, மூத்த அதிகாரி அல்லது மனிதவளத் துறையிடம் இதுபற்றி புகாரளித்துள்ளனர்.

இந்த ஆய்வு, சந்தை ஆய்வு நிறுவனமான Ipsos மற்றும் பாலின-சமத்துவ அமைப்பு Aware ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில், பணிபுரியும் இருபாலர் என மொத்தம் 1,000 சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், ஆன்லைனில் வாக்களித்ததாக Aware நேற்று (ஜனவரி 14) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறியவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் கசப்பான கருத்துக்கள், படங்கள் அல்லது பாலியல் செய்திகள் பெற்றதாக கூறியுள்ளனர்.

அவர்களின் தோற்றம், உடல் அல்லது பாலியல் நடவடிக்கைகள் குறித்து பல கருத்துக்களும் இதில் கேட்கப்பட்டதாக கூறினர்.

இருப்பினும், இதில் 20 சம்பவங்களுக்கு சாட்சி இருக்கும்பட்சத்தில் குற்றம் செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஏதும்இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொங்கலோ பொங்கல்” – தமிழர் திருநாள் வாழ்த்து கூறிய பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…