சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 3 ஊழியர்கள் மரணம் – குடும்பத்தை எண்ணி பாதுகாப்புடன் இருக்க வேண்டுகோள்!

workplace deaths singapore construction workers
Workplace Safety and Health Council

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் மட்டும் 3 ஊழியர்கள் வேலையிட விபத்தில் உயிரிழந்துள்ளது வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ஊழியர்

வெஸ்ட் கோஸ்ட்டில் (West Coast) அமைந்துள்ள கூட்டுரிமை (condominium) கட்டிடத்தின் கூரையில் இருந்து 37 வயதான வெளிநாட்டு ஊழியர் விழுந்து இறந்ததாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று (மே 31) தெரிவித்துள்ளது.

சுமார் சுமார் 20 மீ தொலைவில் இருந்து விழுந்த அவர் வங்காளதேசத்தை சேர்த்த ஊழியர்.

சம்பளத்தை குறைத்து கொடுத்து, வெளிநாட்டு பணிப்பெண்ணை அடித்து தாக்கிய பெண்ணுக்கு சிறை மற்றும் அபராதம்

இரண்டாவது ஊழியர்

அதே போல, கடந்த வெள்ளிக்கிழமை (மே 27) லாரியில் இருந்து கிரேன் கவிழ்ந்து விழுந்ததில், பெரிய உலோக குழாயின் அடியில் சிக்கிக்கொண்ட 49 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம், கடந்த மே 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 1.05 மணியளவில் 18 டெஃபு அவென்யூ 2 நடந்தது என்று SCDF கூறியுள்ளது.

மூன்றாவது ஊழியர்

தொழிற்சாலையின் ஸ்கைலைட் மேற்கூரையைச் சுத்தம் செய்யும் பணிக்கு தயாராகிக்கொண்டிருந்த 49 வயதான உள்ளூர் ஊழியர் ஒருவர்​​ 9.5மீட்டர் உயரத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனமான Vina Specialist நிறுவனத்தின் ஃப்ரீலான்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார் அவர்.

கடந்த மே 19 அன்று காலை 8.40 மணிக்கு ஜூ கூன் சர்க்கிள் எண் 36ல் (36 Joo Koon Circle) நடந்த இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.

ஊழியர்கள் அனைவரின் நலனை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இருந்தாலும் கூட வேலையிடங்களில் நாம் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நம்மை எதிர்பார்த்து குடும்பம் உள்ளதை ஒவ்வொருவரும் சிந்தித்து பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தொடரும் மரணங்கள்… மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் 20மீ உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலி