2021 உலகச் சாம்பியன்ஸ்: சிங்கப்பூர் முழுவதும் வலம் வந்த சாதனை வீரர்கள் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

@lohkeanyew Instagram

இன்று (டிச. 26) மதியம் நீங்கள் சிங்கப்பூரில் இருந்திருந்தால், “2021 உலகச் சாம்பியன்” சிங்கப்பூர் அணி கொண்டாட்ட ஊர்வலத்தைக் கடந்து செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

உலக அளவிலான அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில், நகரப் பகுதியைச் சுற்றி மேற்கூரை திறந்த பேருந்து ஒன்றில் நான்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு “வீர அணிவகுப்பு” வழங்கப்பட்டது.

மரத்தின் மீது மோதிய SBS பேருந்து: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி – ஓட்டுநர் சஸ்பெண்ட்

 நான்கு சிறந்த விளையாட்டு வீரர்கள்:

லோ கீன் யூ (Loh Kean Yew), பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) சாம்பியன்.

யிப் பின் சியு (Yip Pin Xiu), டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இரட்டை தங்கப் பதக்கம் வென்றவர்.

ஷைனா இங் (Shayna Ng), சர்வதேச உருட்டுப் பந்துப் போட்டி கூட்டமைப்பு (IBF) தங்கப் பதக்கம் வென்றவர்.

அலோசியஸ் யாப் (Aloysius Yapp), உலக பூல்-பில்லியர்ட் தரவரிசையில் உலகின் முதல் இடத்தைப் பிடித்த முதல் சிங்கப்பூரர்.

அவர்கள் மெரினா பே சாண்ட்ஸ், சைனாடவுன், கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, டோபி காட், புகிஸ் சந்திப்பு, சன்டெக் சிட்டி பகுதி வழியாக வலம் வந்தனர்.

அவர்களை கண்ட பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

“குழந்தைகளை பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்” – நானும் குழந்தை தான்.. அவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்குகிறேன்!